விஜையை வைத்து விஷாலை பங்கமாக கலாய்த்த பிரபல அமைச்சர்!

விஜையை வைத்து விஷாலை பங்கமாக கலாய்த்த பிரபல அமைச்சர்!
  • PublishedMay 13, 2023

சில மாதங்களுக்கு முன் தளபதி விஜய் நடிக்கும் லியோ படத்தில் நடிகர் விஷால் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.

ஆனால் விஷாலுக்கு சம்பளப் பிரச்சனை மற்றும் கால்ஷீட் பிரச்சனை என்று சொல்லி அவரால் அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனது. அதனைத் தொடர்ந்து அவர் நடிக்கும் மார்க் ஆண்டனி படத்தின் டீசரை விஜய் வெளியிட்டார்.

அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதற்கிடையே நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் பற்றிய செய்திகளும் அண்மை நாட்களாக வலம் வந்துக் கொண்டிருக்கின்றன.  இந்நிலையில், இது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த  அமைச்சர் செல்லூர் ராஜு விஷாலை பங்கமாக கலாய்த்துள்ளார்.  அதாவது,  நடிகர் விஜய் தாராளமாக அரசியலுக்குள் வரலாம்.

ஏனென்றால் அவர் பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். ஒன்று,  இரண்டு படங்களில் நடித்த நடிகர் விஷாலே தன்னை ஒரு முதலமைச்சர் என்று சொல்லிக் கொள்ளும் பொழுது நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு என்பது போல் விஷாலை டேமேஜ் செய்து பதில் அளித்திருக்கிறார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *