வாழ்நாளின் கடைசிவைரை காதல் மன்னனாகவே வாழ்ந்த ஜெமினி கணேஷன் : 78 ஆவது வயதில் நடத்த திருமணம்!

வாழ்நாளின் கடைசிவைரை காதல் மன்னனாகவே வாழ்ந்த ஜெமினி கணேஷன் : 78 ஆவது வயதில் நடத்த திருமணம்!
  • PublishedMay 13, 2023

பத்மஸ்ரீஇ கலைமாமணி ஆகிய விருதுகளை பெற்று தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்தவர்தான் ஜெமினி கணேசன். இவரின் காதல் வசமான நடிப்பால் காதல் மன்னன் என்ற பெயரை பெற்றவர்.  இவர் திரைப்படங்களில் மட்டுமல்லாமல்,  நிஜ வாழ்க்கையிலும் காதல் மன்னனாகவே வலம் வந்தார்.

அவ்வாறு இவரின் காதலில் விழுந்து மனைவியாய் வாழ்ந்த 4 பெண்களைப் பற்றி இங்கு காணலாம்.

அலமேலு: 1940ல் இல்லற வாழ்க்கையில் ஈர்ப்பு இல்லாத இவர் அலமேலு என்ற பெண்ணை மணந்து கொண்டார். அதன்பின் அன்பிற்கு அடையாளமாக வாழ்ந்த பெண் வாழ்ந்த நிலையில் இவர்களுக்கு பிள்ளைகள் பிறந்தார்கள். கடைசி வரை ஜெமினியின் லீலைகளை தெரிந்தும் மௌனம் சாதித்து வாழ்ந்து வந்திருக்கிறார்.

புஷ்பவல்லி: தமிழிலும்,  தெலுங்கிலும் கதாநாயகியாக வலம் வந்தவர் தான் நடிகை புஷ்பவல்லி. இவர் திருமணம் ஆனவர் என்பது தெரிந்தும் அவரின் விவாகரத்துக்கு பின்பு அவரை காதலித்து வந்தார் ஜெமினி. இவர்களின் காதல் ரகசியமாக இருப்பின் இவர்கள் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டதாக குறிப்பிடுகிறது.

சாவித்திரி: தமிழ்,  தெலுங்கு,  கன்னடா,  ஹிந்தி ஆகிய மொழிகளில் 300க்கு மேற்பட்ட படங்களில் நடித்தவர் தான் நடிகை சாவித்திரி.  இவர் நடிகை ஆடிஷனுக்கு ஜெமினி ஸ்டுடியோவிற்கு வந்த போது காதல் மன்னனால் ஈர்க்கப்பட்டார். அதன்பின் மனம் போல் மாங்கல்யம் என்ற படத்தில் இருவரும் ஜோடியாக நடித்த பின்பு காதல் மலர்ந்தது. மேலும் ஜெமினி கணேசன் இவரை முறைப்படி இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூலியான ஆண்ட்ரூ: ஜெமினியின் நடிப்பால் ஈர்க்கப்பட்டவர்களில் இவரும் ஒருவர். 1997ல் இவரை திருமணம் செய்து கொண்டார் காதல் மன்னன். அப்பொழுது 78 வயதான ஜெமினிக்கு 36 வயது பெண்ணுடன் திருமணம் நடந்தது அதிர்ச்சியான விஷயமாக கருதப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *