மக்கள் நாயகனின் வாரிசு ரெடியாகி விட்டார்! அடுத்தது என்னவாக இருக்கும்?

மக்கள் நாயகனின் வாரிசு ரெடியாகி விட்டார்! அடுத்தது என்னவாக இருக்கும்?
  • PublishedJune 14, 2023

விஜய் சேதுபதி தனது மகன் சூர்யாவுடன் எடுத்துக்கொண்ட போட்டோ வைரலாகி வருகிறது.

நானும் ரவுடி தான் படத்தில் சிறுவனாக நடித்திருந்த சூர்யா சேதுபதி, இப்போது ஹீரோ லுக்கில் மாஸ் காட்டுகிறார்.

விஜய் சேதுபதியின் லேட்டஸ்ட் கிளிக்#கோலிவுட்டின் வெரைட்டியான நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி, நிற்கக் கூட நேரமில்லாமல் ஓடிக் கொண்டே இருக்கிறார்.

இந்தியில் ஷாருக்கானுடன் ஜவான் படத்தில் நடித்து வருவதோடு வெப் சீரிஸ்களிலும் கமிட்டாகியுள்ளார். ஜவான் ஷூட்டிங் முடிந்ததும் தமிழில் மிஷ்கின் உள்ளிட்ட இன்னொரு முன்னணி இயக்குநரின் படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், தனது மகன் சூர்யாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு கெத்து காட்டியுள்ளார். விஜய் சேதுபதிக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.

கிட்டத்தட்ட விஜய் சேதுபதியை மகன் அப்படியே நகலெடுத்துள்ளார் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் போட்டு வருகின்றனர்.

இருவருமே ஸ்டைலிஷாக போஸ் கொடுத்துள்ள இந்த போட்டோ வைரலாகி வருகிறது. இதன்மூலம் தனது வீட்டிலும் ஒரு ஹீரோ ரெடியாகிவிட்டார் என விஜய் சேதுபதி லீட் கொடுத்துள்ளதாக தெரிகிறது.

விஜய் சேதுபதியின் மகனை பார்த்த பல இயக்குநர்கள் அவரை நடிக்க வைக்க முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் விரைவில் கோலிவுட்டில் ஒரு இளம் ஹீரோ அறிமுகமாக வாய்ப்புள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *