கோடிகளை கொட்டி கொடுத்தும் நடிக்க மறுத்த ராக்கி பாய்! காரணம் இதுதானா??

கோடிகளை கொட்டி கொடுத்தும் நடிக்க மறுத்த ராக்கி பாய்! காரணம் இதுதானா??
  • PublishedJune 14, 2023

கே.ஜி.எஃப் திரைப்படத்தில் ராக்கி பாய் ஆக மிரட்டிய நடிகர் யாஷ், பிரம்மாண்ட திரைப்படத்தில் ராவணனாக நடிக்க மறுப்பு தெரிவித்து விட்டாராம்.

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் யாஷ். இவர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எஃப் திரைப்படத்தில் ராக்கி பாய் என்கிற கேங்ஸ்டர் ரோலில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் பேமஸ் ஆகிவிட்டார்.

கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த கே.ஜி.எஃப் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1200 கோடிக்கு மேல் வசூலித்து மாபெரும் சாதனை படைத்தது.

கே.ஜி.எஃப் 2 படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் யாஷ் யார் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்பது புரியாத புதிராகவே இருந்து வருகிறது.

இதனிடையே சமீபத்தில் யாஷ், இந்தியில் இராமாயணத்தை மையமாக வைத்து பிரம்மாண்டமாக உருவாக உள்ள திரைப்படத்தில் இராவணனாக நடிக்க உள்ளதாகவும், இப்படத்தில் ரன்பீர் கபூரும், ஆலியா பட்டும் ராமர், சீதையாக நடிக்க இருப்பதாகவும் தகவல் பரவி வந்தது.

இப்படத்தை நிதேஷ் திவாரி இயக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், அந்த திரைப்படத்தில் நடிக்க நடிகர் யாஷ் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. யாஷ் ராவணனாக நடிக்கப் போகிறார் என்கிற தகவல் பரவியதும், அதற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். தயவு செய்து இராவணனாக நடிக்க வேண்டாம் என்றும் நடிகர் யாஷுக்கு ரசிகர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்தன.

நடிகர் யாஷ் எப்போதுமே ரசிகர்களுக்கு தான் முன்னுரிமை கொடுப்பவர். அவர்களின் விருப்பத்திற்கு மாறாக எதையும் செய்ய விரும்பாதவர் என்பதால், ரசிகர்களின் இந்த எதிர்ப்பை கருத்தில் கொண்டு, இராவணன் கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம். இப்படத்திற்காக பல கோடி சம்பளத்தை தயாரிப்பு நிறுவனம் வாரி இறைக்க முன் வந்தும், யாஷ் தன்னுடைய ரசிகர்களுக்காக இப்படத்தில் நடிக்க மறுத்துள்ளது திரையுலகினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *