வந்தாச்சி “பாண்டியன் ஸ்டோர்ஸ் – 2” நம்ம தனம் அக்காவ தூக்கிட்டாங்களே….

வந்தாச்சி “பாண்டியன் ஸ்டோர்ஸ் – 2” நம்ம தனம் அக்காவ தூக்கிட்டாங்களே….
  • PublishedOctober 15, 2023

விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் முதல் பாகம் முடிவுக்கு வந்ததை அடுத்து அதன் இரண்டாம் பாகத்துக்கான புரோமோ வெளியாகி உள்ளது.

விஜய் டிவியில் பிளாக்பஸ்டர் ஹிட் ஆன சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் ஒன்று. கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியல் அண்ணன் – தம்பி பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.

இதில் நடிகர் ஸ்டாலின், மூர்த்தி என்கிற முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடிகை சுஜிதா தனுஷ் நடித்திருந்தார். மூர்த்தியின் சகோதரர்களாக வெங்கட், குமரன், சரவண விக்ரம் ஆகியோர் நடித்திருந்தனர்.

குடும்ப பாசத்தையும், கூட்டுக் குடும்பத்தின் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் விதமாக அமைந்திருந்த இந்த சீரியல் கடந்த 5 ஆண்டுகளாக சக்கைப்போடு போட்டு வந்தது.

இந்நிலையில், தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவுக்கு வந்துள்ளது. அந்த சீரியல் முடிந்த கையோடு, அதன் இரண்டாம் பாகத்தை ஆரம்பித்துள்ளனர். இதற்கான புரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாம் பாகத்தில் ஸ்டாலின் தவிர மற்ற அனைவருமே மாற்றப்பட்டு உள்ளனர். ஸ்டாலின் வழக்கம்போல் மூர்த்தியாக நடிக்க, அவருக்கு ஜோடியாக 90-களில் கலக்கிய நடிகை நிரோஷா நடிக்கிறார்.

முதல் பாகம் அண்ணன் தம்பி பாசத்தை மையமாக வைத்து உருவானதை போல் அதன் இரண்டாம் பாகத்தை தந்தை மகன் பாசத்தை மையமாக வைத்து உருவாக்க உள்ளனர். இதில் மூர்த்தியின் மகன்களாக 3 பேர் நடிக்கின்றனர். இந்த சீசன் விரைவில் தொடங்க உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *