அடேங்கப்பா… நம்ம ஆண்டனி தாஸின் சொத்து மதிப்பு இவ்வளவா.?

அடேங்கப்பா… நம்ம ஆண்டனி தாஸின் சொத்து மதிப்பு இவ்வளவா.?
  • PublishedNovember 28, 2023

நடிகர் சஞ்சய் தத் பாலிவுட்டில் மிகப்பெரிய நடிகராக இருக்கிறார். கேஜிஎப் எனும் படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கு பரிட்சயமானார்.

இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் மிரட்டியிருந்தார் சஞ்சய் தத். அதைத்தொடர்ந்து லியோ படத்தில் விஜய்யின் அப்பா கேரக்டரில் ஆண்டனி தாசாக நடித்திருந்தார்.

சஞ்சய் தத்தின் சொத்து மதிப்பு பாலிவுட் சினிமா ரசிகர்களால் வியந்து பார்க்கப்படுகிறது. உண்மையில், சஞ்சய் சினிமாவுக்கு வந்து தான் இதையெல்லாம் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. அவர் பிறந்ததே பெரிய பணக்காரனாகத்தான். அவருடைய அப்பா சுனில் தத் பாலிவுட்டில் பெரிய நடிகராக இருந்ததோடு, இயக்குனர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என எல்லாத் துறையிலும் கால் வைத்து கோடி கணக்கில் சம்பாதித்து வைத்திருக்கிறார்.

சஞ்சய் தத் 1981 ஆம் ஆண்டிலிருந்து நடிகராக இருக்கிறார். கிட்டத்தட்ட 150 படங்களில் இவர் நடித்திருக்கிறார். 40 வருடங்களில் சினிமாவில் இவர் சேர்த்து வைத்தது கிட்டத்தட்ட 290 கோடியை தாண்டும். அது மட்டும் இல்லாமல் சஞ்சய் இப்போது ஒரு படத்திற்கு ஒன்று முதல் இரண்டு கோடி சம்பளமாக வாங்குகிறார். இவருடைய ஆண்டு வருமானம் 10 முதல் 12 கோடி வரை என சொல்லப்படுகிறது.

சஞ்சய் தத்திடம் இருக்கும் அசையும் சொத்துக்களின் மதிப்பு 35 முதல் 40 கோடி ஆகும். அதே போன்று அசையாத சொத்துக்கள் என்ற கணக்கில் வருபவை அனைத்தும் சேர்த்து ஐந்து முதல் பத்து கோடி இருக்கிறது. கடந்த 2005இல் இவர் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த பிறகு கூட இன்றுவரை சினிமாவிற்கு ஓய்வு கொடுக்காமல் நடித்து வருகிறார்.

சஞ்சய் தத்திடம் மொத்தம் ஐந்து விலை உயர்ந்த கார்கள் இருக்கின்றன. அதில் ஆடி கார் q7 மதிப்பு 90 லட்சம் ஆகும். லேண்ட்ரோவர் ரேஞ்ச் ரோவர் ஆட்டோ பயோகிராபி எனும் கார் மூன்று கோடிக்கு வாங்கப்பட்டு இருக்கிறது.

அதேபோன்று லேண்ட்ரோவர் டிபன்டர் என்னும் காரை இரண்டரை கோடிக்கு வாங்கி இருக்கிறார். FERRARI 599 GTB என்னும் கார் அவரிடம் இருக்கிறது. அதன் மதிப்பு 1.50 கோடி முதல் 3.50 கோடி வரை இருக்கும். இரண்டரை கோடி மதிப்பிலான ஆடி ஆர்8 என்னும் காரை வைத்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *