“என்னை படுக்கைக்கு அழைத்த பிரபல இயக்குனர் இவர் தான்” போட்டுடைத்தார் ஷகிலா..

“என்னை படுக்கைக்கு அழைத்த பிரபல இயக்குனர் இவர் தான்” போட்டுடைத்தார் ஷகிலா..
  • PublishedNovember 28, 2023

பிரபல கவர்ச்சி நடிகை ஷகீலாவும் தனக்கு நடந்த அட்ஜெஸ்மெண்ட் சம்பவம் குறித்து தற்போது மனம் திறந்துள்ளார்.

பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த அவர் “ விசித்ரா எனது தோழி தான். இருவரும் சேர்ந்து சில படங்களில் பணியாற்றியுள்ளோம். தனது அனுபவத்தை அவர் மனம் திறந்து பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது, ஆனால் அதை யார் செய்தார் என்பதையும், அந்த ஹீரோவின் பெயரையும் விசித்ரா குறிப்பிட்டிருக்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ஷகிலா “நான் இன்னும் தெலுங்கு திரையுலகில் வேலை பார்க்கிறேன். நான் நடிக்க வந்த ஆரம்ப நாட்களில் பல போராட்டங்களை சந்தித்தேன். ஒரு கட்டத்தில், அல்லரி நரேஷின் தந்தையும், எழுத்தாளரும் இயக்குநருமான ஈ.வி.வி.சத்யநாராயணா என்னை படுக்கைக்கு அழைத்தார். அவரின் அடுத்த படத்தில் எனக்கு வாய்ப்பு வழங்குவதாக கூறி, என்னை அவரது அறைக்கு வரச் சொன்னார். ஆனால் தற்போது உங்கள் படத்தில் நடித்ததற்காக எனக்கு சம்பளம் வந்துவிட்டது.

மீண்டும் உங்கள் படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு தேவையில்லை என்று பதிலளித்தேன். அவர் இப்போது உயிருடன் இல்லை, ஆனால் டோலிவுட் மீடியாக்களிடம் இது பற்றி பேச நான் தயாராக இருக்கிறேன். அவர் என்னை தனது அறைக்கு அழைத்தார். இதுதான் உண்மை” என்று தெரிவித்தார்.

இதனிடையே நடிகை ஷகிலா சமீபத்தில் தெலுங்கு பிக் பாஸ் தெலுங்கு 7 இல் கலந்து கொண்டார். எனினும் இரண்டாவது வாரத்திலேயே அவர் வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *