”அஜித், விஜயை நெருங்க ஒரு தகுதி வேணும் பாஸ்” : பிரபல இயக்குனரை வச்சுசெய்யும் நெட்டிசன்கள்!

”அஜித், விஜயை நெருங்க ஒரு தகுதி வேணும் பாஸ்” : பிரபல இயக்குனரை வச்சுசெய்யும் நெட்டிசன்கள்!
  • PublishedMarch 21, 2023

நடிகர் விஜய், மற்றும் அஜித்தை நெருங்குவதற்கு ஒரு தகுதி வேண்டும் என்றும், ஒரு சில இயக்குனர்கள் வெறுமனே இரண்டு, மூன்று படங்களை செய்துவிட்டு மணிரத்தினம் லெவலுக்கு பீள் பண்ணுவதாகவும் சில விமர்சனங்கள் பிரபல இயக்குனர் மீது முன்வைக்கப்பட்டுள்ளது.

அதாவது நானும் ரௌடிதான் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் விக்னேஷ் சிவன். இந்த படத்தின் மூலமாகவே நயன் மற்றும் விக்கிக்கு இடையில் காதல் மலர, அந்த காதல் சமீபத்தில் திருமணத்தில் முடிந்தது.

இந்தநிலையில், திருமணத்திற்கு பின் இயக்குனர் விக்னேஷ் சிவன் அடிமேல் அடிவாங்கி வருகிறார் என்றுதான் சொல்லவேண்டும். அஜித் நடிப்பில் உருவாகி ஏகே 62 திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

இருப்பினும் ஒருசில காரணங்களால் அந்த வாய்ப்பு கைநழுவி விட, தற்போது அந்த படத்தை வேறு நாயகன் ஒருவரை வைத்து எடுத்து விட வேண்டும் என்ற முடிவில் விக்கி இருக்கிறார். அந்த படத்தை ஏகே62 வெளியாகும் அன்றே அந்த படத்திற்கு போட்டியாகவே வெளியிட திட்டமிட்டுள்ளாராம். இதற்கிடையே சமூகவலைத்தளங்களில் தான் புறக்கணிக்கப்பட்டது குறித்தும் அவ்வவ்போது பதிவிட்டு வருகிறார்.

இதனை பார்த்த சில விமர்சகர்கள், அஜித், விஜயை நெருங்க தகுதி வேண்டும் பாஸ் என கலாய்த்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *