அந்த கேள்வியை அவரிடமை கேளுங்கள்.. எஸ்.ஏ.சந்திரசேகர் பதிலால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் !

அந்த கேள்வியை அவரிடமை கேளுங்கள்.. எஸ்.ஏ.சந்திரசேகர் பதிலால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் !
  • PublishedMarch 8, 2023

நடிகர் விஜய் குறித்த கேள்விகளை அவரிடமே கேளுங்கள் என இயக்குநரும், விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ சந்திரசேகர் தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநரான எஸ்.ஏ.சந்திரசேகர். ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ் என முன்னணி நடிகர்களை வைத்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராக விளங்கிக் கொண்டிருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர், நான் கடவுள் இல்லை என்ற படத்தை தயாரித்து இருந்தார். சமுத்திரக்கனி, இனியா, சாக்ஷி அகர்வால் , சரவணன், ரோகினி, இமான் அண்ணாச்சி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் பிப்ரவரி 3ம் திகதி வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.

CBCID பொலிஸ் அதிகாரியான சமுத்திரக்கனி கொலை, கொள்ளைகள் செய்யும் தாதா சரவணனை கைது செய்து சிறையில் அடைக்கிறார். ஆனால், சிறையில் இருந்து தப்பிக்கும் சரவணன், சமுத்திரக்கனி குடும்பத்தை அழிக்க பிளான் போடுகிறார். மற்றொரு புறம் தொழில் அதிபர் எஸ்.ஏ.சந்திரசேகர் தனது அடையாளத்தை வெளிப்படுத்தாமல் கடவுள் என்ற பெயரில் உதவி கேட்பவர்களுக்கு செய்கிறார். அவரிடம் சமுத்திரக்கனியின் மகளும் உதவி கேட்டு கடிதம் அனுப்புகிறார். சமுத்திரக்கனி குடும்பம் சரவணனின் கொலை வெறியில் இருந்து தப்பியதா? இல்லை என்பது தான் நான் கடவுள் இல்லை படத்தின் மீதி கதை.

நான் கடவுள் இல்லை படம் வெளியாகி விட்டதால் ஓய்வில் இருக்கும் எஸ்.ஏ சந்திரசேகர் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் உள்ள புத்திர காமேட்டீஸ்வரர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவரை சூழ்ந்து கொண்ட செய்தியாளர்கள். விஜய் அரசியலுக்கு வருவாரா? என கேள்வி எழுப்பினார்கள். இந்த கேள்விக்கான பதிலை நீங்கள் விஜய்யிடமே , கேளுங்கள் என்னிடம் அவர் பற்றி கேட்காதீர்கள் என்றார். எஸ்.ஏ சந்திரசேகரின் இந்த பதில் விஜய் ரசிகர்களை அதிர்ச்சி அடைந்தனர்.

விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று விரும்பிய எஸ்.ஏ.சந்திரசேகர், அவ்வப்போது விஜய்யின் அரசியல் குறித்து பேசி வந்தார். விஜய்யின் பெயரில் அரசியல் கட்சியையும் பதிவு செய்துள்ளார். இதனால் தந்தைக்கும் மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, கடந்த சில வருடங்களாக அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே பேச்சுவார்த்தையே இல்லை. அம்மா ஷோபாவிடம் மட்டும் அவ்வப்போது போனில் பேசிவருகிறார் விஜய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *