உலக படமாக உருவாகும் தங்கலான் திரைப்படம்!

உலக படமாக உருவாகும் தங்கலான் திரைப்படம்!
  • PublishedMarch 21, 2023

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தங்கலான். இந்த திரைப்படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் ‘தங்கலான்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இப்படத்தின் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இவர்  ‘தங்கலான் உலக திரைப்படம் எனவும்,  இப்படத்தை எவ்வளவு மொழிகளில் மொழிப்பெயர்க்க முடியுமோ அத்தனை மொழிகளிலும் மொழிப்பெயர்ப்போம் எனவும் கூறியுள்ளார்.

இந்த படத்தை பார்க்காத மக்களே இல்லை என்ற அளவிற்கு பல மொழிகளில் டப் செய்யவுள்ளோம்’ எனத் தெரிவித்தார். இயக்குனரின் இந்த கருத்திற்காகவே படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்க இரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *