ஒரே காரில் மாஸ் காட்டும் லியோ மற்றும் ரோலக்ஸ்… ட்ரெண்டாகி வரும் போஸ்டர்

ஒரே காரில் மாஸ் காட்டும் லியோ மற்றும் ரோலக்ஸ்… ட்ரெண்டாகி வரும் போஸ்டர்
  • PublishedMarch 6, 2023

விஜய் – லோகேஷ் கூட்டணியில் உருவாகும் லியோ படத்தின் சூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. மிகப் பெரிய மல்டி ஸ்டார்ஸ் படமாக உருவாகும் இந்தப் படம் ஆயுத பூஜை விடுமுறையில் வெளியாகவுள்ளது.

லியோ லோகேஷின் சினிமாட்டிக் யுனிவர்ஸ் கான்செப்ட்டில் உருவாகிறதா இல்லையா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.இந்நிலையில், லியோ விஜய்யும், ரோலக்ஸ் சூர்யாவும் ஒரே காரில் ஆக்‌ஷன் ட்ரீட் கொடுக்கும் போஸ்டர் வைரலாகி வருகிறது.

வாரிசு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் தற்போது லியோ ஷூட்டிங்கில் பிஸியாக காணப்படுகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. விரைவில் காஷ்மீர் ஷெட்யூல் நிறைவுக்கு வரும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், 7 ஸ்க்ரீன்ஸ் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்தப் படம் லோகேஷின் சினிமாட்டிக் கான்செப்ட்டில் உருவாகிறதா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

காஷ்மீரில் நடைபெற்று வரும் லியோ ஷூட்டிங்கில், த்ரிஷா, மிஷ்கின், கெளதம் மேனன், ப்ரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்நிலையில், லியோ ப்ரோமோ வீடியோ, கமல் நடித்த விக்ரம் படத்தின் ப்ரோமோ வீடியோ மாடலில் இருந்தது. அதனால், விக்ரம் க்ளைமேக்ஸில் என்ட்ரி கொடுத்த ரோலக்ஸ் – சூர்யாவும் லியோவில் விஜய்யுடன் மோதலாம் என எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

லியோ டைட்டில் ப்ரோமோவில் சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டரை நினைவுப்படுத்தும் விதமாக ஸ்கார்ப்பியன் டாட்டுஸ் இடம்பெற்றிருந்தது. இதுவே ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், ரோலக்ஸ் சூர்யாவும், லியோ விஜய்யும் ஒரே காரில் அனல் பறக்க செல்லும் போஸ்டர் ஒன்று வைரலாகி வருகிறது. இது ஃபேன்மேட் போஸ்டராக இருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் இந்த சீன் உண்மையாக இருந்தால் தரமாக இருக்கும் என்ற ஹைப்பை ஏற்படுத்தியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் திரைப்படத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் இறுதியில் சூர்யாவும் கேமியோ ரோலில் என்ட்ரி கொடுத்து மிரட்டியிருந்தார். ரோலக்ஸ் என்ற கேரக்டரில் சூர்யாவின் அசுரத்தனமான வில்லத்தனம் சிலிர்க்க வைத்திருந்தது. முக்கியமாக இந்த சீனில் சூர்யா ஸ்கார்ப்பியன் டாட்டூவுடன் நடித்திருந்தார். தளபதி 67 டைட்டில் ப்ரோமோவில் விக்ரம் ரோலக்ஸுக்கும் விஜய்யின் லியோ கேரக்டருக்கும் தொடர்பு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், கைதி படத்தில் நெப்போலியன் என்ற போலீஸ் கேரக்டரில் நடித்திருந்த ஜார்ஜ் மரியன், விக்ரமில் ஏஜெண்ட் டினாவாக நடித்த வசந்தி இருவருமே லியோ படத்தில் இணைந்துள்ளனர். இதுவே லியோவும் லோகேஷ் கனராஜ்ஜின் எல்சியூ கான்செப்ட்டில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படம் ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சென்னை, காஷ்மீரை தொடர்ந்து லியோ படத்தின் அடுத்தக்கட்ட ஷூட்டிங் எங்கு நடைபெறவுள்ளது என்பது குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *