‘குந்தவை’ திரிஷாவை வீட்டுக்குள்ளேயே ‘குந்த’வையுங்க – திரைபிரபலத்தின் கமெண்ட் வைரல்

‘குந்தவை’ திரிஷாவை வீட்டுக்குள்ளேயே ‘குந்த’வையுங்க – திரைபிரபலத்தின் கமெண்ட் வைரல்
  • PublishedMarch 8, 2026

இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் விஜய்- திரிஷா விவகாரத்தில் தெரிவித்துள்ள கமெண்ட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய்யும் நடிகை திரிஷாவும் ஒரே காரில் ஒரே நிற உடையில் திருமண நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொண்டது பெரும் விவாதப் பொருளான நிலையில்,நிகழ்ச்சி ஒன்றில் திரிஷாவின் போட்டோவை வைத்து இயக்குநரும் நடிகருமான பார்த்திபனிடம் கமெண்ட் கேட்கப்பட்டது.

அதற்கு “இந்த குந்தவையை கொஞ்ச நாள் வீட்டுக்குள்ளேயே குந்தவைக்கிறது நல்லதுங்க, வெளிய வராம பார்த்துக்கோங்க. அதுனால நிறைய பிரச்சனைகள் உண்டாகாமல் பாத்துக்கலாம். சில கவிதைகளை ரசிக்கலாமே தவிர, அந்த கவிதையை சொல்லாம இருக்கிறது நல்லம்னு நினைக்கிறேன் ” என இவ்வாறு பார்த்திபன் கூறியுள்ளார். இது தற்போது பகிரப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *