சரக்கு பார்ட்டியில் குத்தாட்டம் போட்ட சாய் பல்லவி… வைரலாகும் போட்டோஸ்

சரக்கு பார்ட்டியில் குத்தாட்டம் போட்ட சாய் பல்லவி… வைரலாகும் போட்டோஸ்
  • PublishedMarch 9, 2024

நடிகர் அமீர் கான் மகன், ஜுனைத் கானுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வரும், திரைப்பட குழுவினரோடு சாய்பல்லவி பார்ட்டியில் குத்தாட்டம் போட்ட போட்டோஸ் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர், சாய் பல்லவி. தற்போது பாலிவுட் திரையுலகிலும், கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார். முதல் ஹிந்தி படத்திலேயே… நடிகர் அமீர் கான் மகன் ஜுனைத் கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தை அமீர் கான் தான் தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் துவங்கிய நிலையில், விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

முதல் கட்டமாக ஜப்பானில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டது. அதன் படி ஜப்பான் சென்ற படக்குழுவினர், சமீபத்தில் கூட ஜப்பானில் நடிக்கும் சப்போரோ பனி விழாவின் போது ஜூனைத் கான் மற்றும் சாய் பல்லவி எடுத்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டது.

சுமார் 30 நாட்களுக்கு மேலாக ஜப்பானில் நடந்த முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. எனவே படக்குழுவினர் இதனை ட்ரிங்க்ஸ் பார்ட்டியுடன் கொண்டாடியுள்ளனர். இதில் நடிகை சாய் பல்லவியும் கலந்து கொண்டு, குடிக்கவில்லை என்றாலும் டான்ஸ் ஆடி தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்த போட்டோஸ் மற்றும் வீடியோ வைரலாகி வருகிறது.

    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *