சிம்பு படத்தில் குத்தாட்டம் போட்ட சாய்ஷா : சம்பளம் எவ்வளவு தெரியுமா?
நடிகை சாய்ஷா பத்துதல திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். இந்த பாடலுக்காக அவர் வாங்கிய சம்பளம் குறித்த தகவல்தான் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
இதற்கு முன்பு நடிகை சமந்தா புஷ்பா திரைப்படத்தில் ஓ சொல்றியா பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடியிருந்தார். இந்த பாடலுக்காக அவர் கோடி கணக்கில் சம்பளம் வாங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
அந்த வரிசையில் தற்போது சாய்ஷாவும் இணைந்துள்ளார். சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள பத்துதல திரைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைப்பில் உருவான ராவடி என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
இந்த பாடலுக்காக இவருக்கு 40 இலட்சம் ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. சாய்ஷாவை பொறுத்தவரை அவர் திரைப்படத்தில் நடிப்பதற்கே 40 இலட்சம் ரூபாய்தான் சம்பளமாக வாங்கினார். இதுவே அவருக்கு அதிகம் என சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.