சீரியலில் வனிதா விஜயகுமாரின் புதிய அவதாரம்

சீரியலில் வனிதா விஜயகுமாரின் புதிய அவதாரம்
  • PublishedApril 13, 2023

சீரியலில் வனிதா விஜயகுமாரின் புதிய அவதாரம் எடுக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் புலம்பெறும் நடிகரான விஜயகுமாரின் மகளும் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ அருண் விஜயின் சகோதரியுமான வனிதா விஜயகுமார் 1995 ஆம் ஆண்டு வெளியான சந்திரலேகா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் இவர் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் சீசன் மூன்றில் கலந்துகொண்டு கடும் சர்ச்சைகளை கிளப்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டவர்.

மேலும் இவர் சில திரைப்படங்களில் உதவி இயக்குனராகவும் ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார். பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ தவிர்த்து குக் வித் கோமாளி சீசன் 1ல் சாம்பியன் பட்டம் வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சின்னத்திரை மற்றும் பெரிய திரை என இரண்டிலுமே கலக்கி வரும் இவர் தனது திருமணங்களின் மூலம் அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சோசியல் மீடியாவில் இவரது சர்ச்சைக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாலமும் இருக்கிறது.

தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி டிஆர்பி ரேட்டிங்கில் கலக்கி கொண்டிருக்கும் மாரி என்ற தொடரில் நடிக்கயிருக்கிறார். இந்த சீரியலில் ஒரு புதிய கேரக்டரில் நடிப்பதற்கு வனிதா விஜயகுமாரை ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியானதிலிருந்தே அந்த சீரியலுக்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்து விட்டது.

இது குறித்து பேட்டியளித்திருக்கும் வனிதா விஜயகுமார் ‘மாரி போல் அற்புதமான ஒரு சீரியலில் நடிப்பதற்கு தான் ஒப்பந்தம் செய்யப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியை தருவதாக தெரிவித்துள்ளார். சிவசுப்பிரமணியன், அபிதா, டெல்லி கணேஷ் போன்ற திறமையான கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றுவதை மிகப்பெரிய வாய்ப்பாகவும் பாக்கியமாகவும் கருதுவதாக அவர் தெரிவித்திருக்கிறார். இவரது வருகையால் மாரி தொடருக்கான ரசிகர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *