குரல் பறிப்போய்விட்டது : வைரலாகும் சமந்தாவின் டுவிட்!

குரல் பறிப்போய்விட்டது : வைரலாகும் சமந்தாவின் டுவிட்!
  • PublishedApril 13, 2023

நடிகை சமந்தா தற்போது சாகுந்தலம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் நாளை வெளியாகிறது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

சமந்தாவும் பல்வேறு மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு படத்தை விளம்பரப்படுத்தினார்.

இதனிடையே தனக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும்  இதனால் குரல்வளம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த வாரம் முழுவதும் எனது படத்தை விளம்பரப்படுத்தியதன் மூலம் உங்கள் அன்பால் பொழிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இடைவிடாத விளம்பரங்களால் எனக்கு இப்போது காய்ச்சல் வந்துவிட்டது. மேலும் எனது குரல் போய்விட்டது என்று ட்விட்டரில் கூறியுள்ளார்.

இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. ஏற்கனவே மயோடிஸ் பிரச்சனையால் அவதிப்பட்டு வரும் சமந்தாஇ தற்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு இருப்பது அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *