சூப்பர் அப்டேட் தந்த பொன்னியில் செல்வன் படக்குழு!

சூப்பர் அப்டேட் தந்த பொன்னியில் செல்வன் படக்குழு!
  • PublishedMarch 18, 2023

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் 28 ஆம் திகதி வெளியாகவுள்ளது.

சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் திரிஷாவின் தோற்றம் வடிவமைக்கப்பட்ட வீடியோ வெளியாகி கவனம் பெற்றது. பொன்னியின் செல்வன் -2 போஸ்டர் இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி ‘பொன்னியின் செல்வன் -2’ படத்தின் முதல் பாடலான ‘அக நக’ பாடல் வருகிற 20-ஆம் திகதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

இந்த போஸ்டரில் வாளோடு நிற்கும் திரிஷா முன்பு நடிகர் கார்த்தி கண்ணை கட்டிக் கொண்டு மண்டியிட்டு நிற்கிறார். இந்த போஸ்டரை தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *