சூர்யா ரசிகர்களுக்கு வந்த ஏமாற்றம்.

சூர்யா ரசிகர்களுக்கு வந்த ஏமாற்றம்.
  • PublishedMarch 10, 2026

சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு சூர்யாவும் த்ரிஷாவும்  இணையும் படம் கருப்பு . சூர்யா ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பை இப்படத்திற்கு கொண்டுள்ளனர்.

அடுத்த மாதம் 10 ஆம் திகதி இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது குறித்த திகதியில் படம் வெளியாகாது என இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்துள்ளார். இது சூர்யா ரசிகர்களை கடும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

படத்தின் ரிலீஸ் திகதி இன்னும் அறிவிக்கப்படாததால் அவர்கள் கோபத்திலும் உள்ளனர். இதனால் ரசிகர்களின் இந்த நிலையை புரிந்துக்கொண்ட ஆர்.ஜே. பாலாஜி, இன்னும் 10 நாட்களில் படத்தின் ரிலீஸ் திகதி அறிவிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். இதேவேளை படம் ஏப்ரல் 10 ஆம் திகதி ரிலீஸ் ஆகாது என்பதையும் அவர் உறுதிபட கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *