ஜனநாயகன் – இன்று வெளியான புதிய தகவல்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய்யின் கடைசித் திரைப்படமாக கருதப்படும் ‘ஜனநாயகன்’ வெளியாவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இன்று நடைபெறவிருந்த படத்தின் மறு தணிக்கைக் குழு பார்வை, எதிர்பாராத காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஜனவரி 9-ஆம் திகதி பொங்கல் வெளியீடாகத் திட்டமிடப்பட்டிருந்த இத்திரைப்படம், தணிக்கைச் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட சட்டச் சிக்கல்களால் ஒத்திவைக்கப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் வரை சென்ற இந்த விவகாரத்தில், தற்போது தயாரிப்பு நிறுவனம் நீதிமன்ற வழக்கை வாபஸ் பெற்றுவிட்டு, மறு தணிக்கைக் குழுவின் முடிவிற்காகக் காத்திருக்கிறது.
இந்நிலையில் நீண்ட இழுபறிக்குப் பிறகு, மார்ச் 17-க்குள் தணிக்கை பணிகள் முடிந்து மார்ச் 19-ஆம் திகதி படம் வெளியாகும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்றைய தணிக்கை ஒத்திவைப்பு மீண்டும் படத்தின் வெளியீட்டுத் திகதியை கேள்விக்குறியாக்கியுள்ளது.