தனது 50 ஆவது திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் மிரட்டும் சிம்ரன்!

தனது 50 ஆவது திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் மிரட்டும் சிம்ரன்!
  • PublishedMarch 17, 2023

சிம்ரன் சினிமாவில் பல வருடங்களாக இருந்தும் தனது 46வது வருடத்தில் தான் 50வது படத்தை எட்டி இருக்கிறார்.  ஆரம்பத்தில் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா போன்ற ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்தார். அதுவும் ஹீரோக்கள் மிஞ்சும் அளவுக்கு சிம்ரன் நடனம் ஆடுவார்.

இந்நிலையில் தனது மார்க்கெட் குறைய தொடங்கியவுடன் கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். வில்லி, அம்மா,  அக்கா போன்ற கதாபாத்திரங்களில் நடிக்கிறார். கடைசியாக ராக்கெட் தி நம்பி விளைவு படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்தநிலையில், சிம்ரன் நடிக்கும் 50 ஆவது திரைப்படத்தின் போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.  இந்த போஸ்டரில் சிம்ரனை பார்க்கும்போது வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தெரிகிறது. இப்போது படப்பிடிப்பு விரைந்து நடைபெற்ற வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சப்தம் படத்தில் சிம்ரன் கதாபாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *