தயாரிப்பாளராக களம் இறங்கிய கமல் : இவ்வளவு பணம் எங்கிருந்து வருகிறது?

தயாரிப்பாளராக களம் இறங்கிய கமல் : இவ்வளவு பணம் எங்கிருந்து வருகிறது?
  • PublishedMarch 22, 2023

நடிகர் கமல்ஹாசன் தற்போது நடிப்பதை காட்டிலும் தயாரிப்பாளராக களம் இறங்கியுள்ளார். இவருடைய ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் பல முன்னணி நடிகர்களுக்கு வலைவிரித்துள்ளார்.

இதன்படி தற்போது சிவகார்த்திகேயன்,  சிம்பு போன்ற நடிகர்களின் படங்களை அடுத்தடுத்து கமல் தயாரிக்க இருக்கிறார். எல்லாமே பெரிய பெரிய பட்ஜெட்டில் உருவாக்க உள்ளதாம்.

இவ்வளவு பணம் கமலுக்கு எப்படி வருகிறது என்ற சந்தேகம் எழுந்துள்ளது.  அதுமட்டுமின்றி தன்னுடைய கஜானாவை திறக்காமலேயே கமல் படங்களை தயாரிக்க இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.

கமல் ஒரு படத்தின் இயக்குனர்,  நடிகர் மற்றும் இசையமைப்பாளர் முடிவு செய்தவுடன் சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமைகளை  விஜய் டிவியின் எம்டி மாதவன் நாயரிடம் பேரம் பேசி முடித்து விடுவாராம்.

பொதுவாக படம் முடிந்த பிறகு தான் படத்தின் சாட்டிலைட் உரிமம் விற்கப்படும். இந்த விஷயத்தில் கமல் ராஜதந்திரியாக செயல்பட்டு வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *