துணிவை துரத்தி பிடித்ததா கில்லி – ரீ-ரிலீஸ் வசூல் .
கடந்த சில ஆண்டுகளாக ரீ-ரிலீஸ் படங்கள் அதிகரித்து வரும் நிலையில், ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த இரண்டு நட்சத்திரப் படங்கள் பிப்ரவரி 20ஆம் திகதி மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டன. இதன்படி தளபதி விஜய் நடித்த கில்லி மற்றும் தல அஜித் குமார் நடித்த துணிவு ஆகிய இரு திரைப்படங்களும் ஒரே நாளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டதால், ரசிகர்களிடையே பெரும் உற்சாகம் நிலவியது.
இந்நிலையில், ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட இந்த இரண்டு படங்களின் முதல் நாள் வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளன. கிடைத்துள்ள தகவல்களின் படி, கில்லி ரீ-ரிலீஸ் முதல் நாளில் அதிகபட்சமாக ரூ.7 லட்சம் வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
மற்றொரு பக்கம், துணிவு ரீ-ரிலீஸ் முதல் நாளில் சுமார் ரூ.4 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் முதல் நாள் வசூலில் கில்லி முன்னிலை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.