நடிகர் சிம்புவின் அடுத்த படத்தை இயக்கும் கமல்ஹாசன்!

நடிகர் சிம்புவின் அடுத்த படத்தை இயக்கும் கமல்ஹாசன்!
  • PublishedMarch 9, 2023

நடிகர் சிம்புவுக்கு இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்த ரிலீஸ் ஆக இருக்கும் திரைப்படம் தான் பத்து தல.
இந்த படம் வரும் 30 ஆம் திகதி வெளியாகவுள்ளது. இதற்கிடையில் தற்போது சிம்புவின் அடுத்த படத்திற்கான அப்டேட் வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் சிறப்பு விருந்தினராக உலக நாயகன் கமலஹாசன் கலந்து கொண்டார்.
தற்போது கமலஹாசனுடைய ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் சிம்புவின் 48வது படத்தை தயாரிக்க இருக்கிறார்.
நேற்று ட்விட்டரில் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தங்களுடைய அடுத்த படத்தின் அறிவிப்பை இன்று மாலை 6:30 மணிக்கு வெளியிடுவதாக பதிவிட்டு இருந்தது. அதன்படி இன்று தங்களுடைய அடுத்த படத்தில் சிம்புவுடன் இணைய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *