நிர்வாணமாக போஸ் கொடுத்த வித்யா பாலன்.. கலாய்த்து தள்ளியரசிகர்கள்

நிர்வாணமாக போஸ் கொடுத்த வித்யா பாலன்.. கலாய்த்து தள்ளியரசிகர்கள்
  • PublishedMarch 7, 2023

டர்ட்டி பிக்சர் படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடித்து டாப்லெஸ் போஸ் எல்லாம் கொடுத்த வித்யா பாலன் இந்த வயதில் மீண்டும் ஆடையை துறந்து அப்படியொரு போஸ் கொடுத்திருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

44 வயதாகும் பாலிவுட் நடிகை வித்யா பாலன் இன்னமும் லீடு ரோலில் பல படங்களில் நடித்து வருகிறார்.கடந்த 2003ம் ஆண்டு வங்காள மொழியில் வெளியான பலோ தேக்கோ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் வித்யா பாலன். பாலிவுட் நடிகை வித்யா பாலன் பாலிவுட் நடிகையான நிலையில், மணிரத்னம் இயக்கிய குரு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். புல் புலாயா, இஷ்க், ஓம் சாந்தி ஓம், பா, உருமி என ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ள வித்யா பாலன் மிஷன் மங்கள், சகுந்தலா தேவி, ஷெர்னி, ஜல்சா உள்ளிட்ட படங்களிலும் சமீபத்தில் நடித்திருந்தார்.

2011ம் ஆண்டு இயக்குநர் மிலன் லுத்ரியா இயக்கத்தில் சில்க் ஸ்மிதாவின் பயோபிக் படமாக உருவான டர்ட்டி பிக்சரில் படு டர்ட்டியாக வித்யா பாலன் நடித்து தேசிய விருதையே தட்டிச் சென்றார். பாலிவுட் படமான அந்த படம் சென்னையிலேயே பல நாட்கள் சில்க் ஸ்மிதா ரசிகர்களால் ஹவுஸ்ஃபுல் காட்சியாக ஓடியது குறிப்பிடத்தக்கது. அந்த படத்தில் கவர்ச்சி பொங்கவும் டாப்லெஸ் காட்சிகளிலும் வித்யா பாலன் நடித்து மிரட்டி 12 ஆண்டுகள் ஆகும் நிலையில், மீண்டும் தனது கவர்ச்சி ஆட்டத்தை இந்த வயதிலும் வெளிக்காட்டி உள்ளார் வித்யா பாலன்.

போனி கபூர் தயாரிப்பில் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பிளாஷ்பேக் காட்சியில் நடித்திருப்பார் வித்யா பாலன். குறைவான காட்சிகளில் வந்தாலும், நிறைவான நடிப்பை வெளிப்படுத்திய வித்யா பாலனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட் இணையத்தை தீப்பிடிக்க வைத்துள்ளது.

பாலிவுட்டின் பிரபல செலிபிரிட்டி போட்டோகிராஃபர் தபு ரத்னானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித்யா பாலனின் லேட்டஸ்ட் நிர்வாண போட்டோஷூட் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஷாக்காக்கி உள்ளார். ஆடை ஏதும் அணியாமல் கையில் நியூஸ் பேப்பர் மட்டும் வைத்துக் கொண்டு பார்ப்பது போல படு கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கிறார் வித்யா பாலன். தபு ரத்னானி போட்டோஷூட் என்றால் பாலிவுட்டின் முன்னணி நடிகைகள் எல்லாமே ஆடைகளை துறந்து விட்டு பிறந்த மேனியாக நிர்வாண போட்டோஷூட் கொடுக்க ரெடியாகி விடுவது எப்படித்தான் தெரியவில்லை என பல இயக்குநர்களே புலம்பி வருகின்றனர்.

கியாரா அத்வானி, சன்னி லியோன், பிரியங்கா சோப்ரா என பலரை இப்படி நிர்வாணமாக போட்டோஷூட் நடத்தி இருக்கிறார் தபு ரத்னானி.

டாய்லெட் போஸ் வித்யா பாலன் கையில் நியூஸ் பேப்பருடன் நிர்வாணமாக இருப்பதை பார்த்த நெட்டிசன்கள் அவரை பங்கமாக கலாய்த்து வருகின்றனர். ஒரு பெண் ரசிகை தினமும் டாய்லெட்டில் நான் இப்படித்தான் பேப்பர் படிப்பேன் என்றே கமெண்ட் அடித்திருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. நடிகை வித்யா பாலன் நீயாத் எனும் படத்திலும் தலைப்பு அறிவிக்காத ஒரு படத்திலும் தற்போது நடித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *