படப்பிடிப்பு பணிகளை நிறைவு செய்த லியோ படக்குழு!

படப்பிடிப்பு பணிகளை நிறைவு செய்த லியோ படக்குழு!
  • PublishedMarch 20, 2023

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவுபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும்,  லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்,  நடிகை பிரியா ஆனந்த்,மன்சூர் அலிகான்,  இயக்குனர்கள் மிஷ்கின்,  கௌதம் வாசுதேவ் மேனன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்தள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு பணிகள் நிறைவடையவுள்ளதாக கூறப்படுகிறது. பின் இரண்டு வார இடைவெளியில் சென்னையில் எடுக்கப்பட வேண்டிய காட்சிகள் எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *