படவாய்ப்புகள் குவிந்து வருவதால் சம்பளத்தை உயர்த்திய வாரிசு நடிகை!

படவாய்ப்புகள் குவிந்து வருவதால் சம்பளத்தை உயர்த்திய வாரிசு நடிகை!
  • PublishedMarch 21, 2023

நடிகர் சிவகார்த்தி்கேயன், அதிதி சங்கர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாவீரன். இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த திரைப்படம் வெளியாகுவதற்கு முன்பே நடிகை அதிதி சங்கர் புதிய திரைப்படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளார்.

இதன்படி அதிதி சங்கர் அடுத்ததாக வாரிசு நடிகர் ஒருவரின் படத்தில் அதிதி நடிக்க உள்ளார் என்ற செய்தி வெளியாகி உள்ளது. விஜய்யின் மாமா பிரிட்டோ தயாரிக்கும் படத்தை இயக்குனர் விஷ்ணுவர்தன் இந்த படத்தை இயக்க உள்ளாராம்.

இந்த படத்தில் முரளியின் மகனும் அதர்வாவின் தம்பியும் ஆன ஆகாஷ் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தான் அதிதி ஷங்கர் நடிக்க விருக்கிறாராம். இப்படி பட வாய்ப்புகள் குவிந்து வருவதால் தற்போது சம்பளத்தை உயர்த்தியுள்ளாராம்  அதிதி சங்கர்.

அதாவது மாவீரன் படத்திற்கு கிட்டத்தட்ட 25 லட்சம் சம்பளமாக அதிதி பெற்றிருந்தார். இப்போது ஆகாஷ் முரளிக்கு ஜோடியாக 5 லட்சம் கூடுதலாக 30 லட்சம் சம்பளம் கேட்டுள்ளாராம். படக்குழுவும் அதிதி கேட்ட சம்பளத்தை கொடுக்க தயாராக உள்ளதாம். இந்த படத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *