பிரித்தானியாவில் ‘லியோ’ செய்த சாதனை… 30 நிமிடங்களுக்குள் விற்றுத்தீர்ந்த டிக்கெட்கள்

பிரித்தானியாவில் ‘லியோ’ செய்த சாதனை… 30 நிமிடங்களுக்குள் விற்றுத்தீர்ந்த டிக்கெட்கள்
  • PublishedSeptember 8, 2023

தளபதி விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கான டிக்கெட் முன்பதிவு பிரிட்டனில் நேற்று ஆரம்பிக்கப்பட்டது..

இந்த படத்திற்கான டிக்கெட் அனைத்தும், 30 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘லியோ’ திரைப்படம் வெளியாக இன்னும் 40 நாட்கள் இருக்கும் நிலையில் அதற்குள் வெளிநாடுகளில் டிக்கெட் விற்பனை அமோகமாக இருப்பது இந்த படத்தின் எதிர்பார்ப்பை மிகப்பெரிய அளவில் அதிகரித்து உள்ளது.

தமிழகத்திலும் இந்த படத்திற்கான டிக்கெட் விற்பனை தொடங்கும் போது மிகப்பெரிய சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘லியோ’ வெளியாகும் அக்டோபர் 19ஆம் தேதி வேறு எந்த திரைப்படமும் வெளியாக வாய்ப்பில்லை என்பதால் தமிழகத்தில் உள்ள 900க்கும் மேற்பட்ட திரையரங்களில் ‘லியோ’ படம்தான் வெளியாகும் என்றும் டிக்கெட் விற்பனையிலும், முதல் நாள் வசூலிலும் மிகப்பெரிய சாதனை செய்யும் என்றும் கூறப்படுகிறது.

விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் ’லியோ’ படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *