பூஜா ஹெக்டேவுக்கு குவியும் தமிழ் பட வாய்ப்பு

பூஜா ஹெக்டேவுக்கு குவியும் தமிழ் பட வாய்ப்பு
  • PublishedFebruary 26, 2023

நடிகை பூஜா ஹெக்டேவுக்கு தமிழ் படங்கள் வாய்ப்பு குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹீரோயினாக நடித்து சமீபத்தில் வெளியான ராதே ஷியாம், பீஸ்ட் , ஆச்சார்யா, F3, சர்க்கஸ் ஆகிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்தது.

இதனால் அவருக்கு மார்க்கெட் குறையும், பட வாய்ப்புகள் குறையும் என பலரும் சமூக வலைத்தளத்தில் கூறி வந்தனர்.

ஆனால், அவருக்கு தமிழில் தற்போது இரண்டு தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளதாம். ஒரு திரைப்படம் இயக்குனர் லிங்கு சாமி இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகவுள்ள, பையா 2 திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் உருவாகவுள்ளது.

எனவே இரண்டாவது பாகம் பிரமாண்டமாக இருக்கவேண்டும் என்பதால் பூஜா ஹெக்டே நடித்தால் நன்றாக இருக்கும் என படக்குழு முடிவு செய்துள்ளார்கள் என தெரியவந்துள்ளது.

அதை போல மற்றோரு திரைப்படம் எதுவென்றால், சுந்தர் சியின் கனவு திரைப்படமான சங்கமித்ரா திரைப்படம் தான். இந்த திரைப்படம் விரைவில் தொடங்கப்படவுள்ளதாகவும், படத்தில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்தால் நன்றாக இருக்கும் என படக்குழு திட்டமிட்டுள்ளார்கள்.

எனவே தொடர்ந்து அவர் நடித்த படங்கள் தோல்வி அடைந்தாலும் கூட இரண்டு பெரிய தமிழ் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்துள்ளது அவர்களுடைய ரசிகர்களை உற்சாகப்படுதியுள்ளது.

மேலும் பூஜா ஹெக்டே தற்போது ஹிந்தியில் கிசி கா பாய் கிசி கி ஜான் என்ற படத்திலும் தெலுங்கில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக ஒரு படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

SUPER DUPER EXCITED to be onboard this grand film with the fantastic Actor Vijay Sir

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *