பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் : முழுவீச்சில் நடைபெறும் பின்னணி இசை பணிகள்!

பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் : முழுவீச்சில் நடைபெறும் பின்னணி இசை பணிகள்!
  • PublishedMarch 21, 2023

மணிரத்னம் இயக்கத்தில் தயாரான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி வெற்றி பெற்றது.

தற்போது பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்துக்கான தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வரும் ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி திரைப்படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், அண்மையில் இந்த படத்தில் இடம்பெற்ற அகநக என்ற பாடாலின் லெரிக்ஸ் வீடியோ வெளியாகி இருந்தது. தற்போது மற்ற பாடல்களுக்கான பின்னணி இசை வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்த புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ள படக்குழுவினர்,  லண்டனில் உள்ள ஸ்டுடியோவில் பின்னணி இசை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *