ப்ளே போயாக மாறிய சிம்பு : கமல் கொடுத்த ஐடியாவா இது?

ப்ளே போயாக மாறிய சிம்பு : கமல் கொடுத்த ஐடியாவா இது?
  • PublishedMarch 17, 2023

நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தற்போது இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் பத்துதல படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தினை தொடர்ந்து தனது 48 ஆவது திரைப்படத்தில் நடிப்பதற்கு கவனம் செலுத்தி வருகிறார். சிம்புவின் 48 ஆவது திரைப்படத்தை  உலகநாயகன் கமலஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

சுமார் 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்படவுள்ள இந்த திரைப்படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குனர்   தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளார்.

இந்த திரைப்படத்தில் சிம்பு ப்ளே போயாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக தனது ஹேர் ஸ்டைலையும் சிம்பு மாற்றியிருக்கிறார். இதன்படி 80 களில் நடிகர்கள் வைத்திருந்த பங்க் ஹேர்ஸ்டைலை சிம்பு வைத்துள்ளார்.

பிளேபாய் கெட்டபுக்கு இந்த ஹேர் ஸ்டைல் தான் நன்றாக இருக்கும் என கமலஹாசன் தான் இந்த கெட்டப்பை பரிந்துரை செய்திருக்கிறாராம் . தேசிங்கு பெரிய சாமியும் சிம்புவும் இணைந்து இருப்பதால் இந்த படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு ரொம்பவும் அதிகமாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *