மீண்டும் இணைந்த வடச்சென்னை திரைப்பட கூட்டணி : வெளியாகிய சூப்பர் அப்டேட்!

மீண்டும் இணைந்த வடச்சென்னை திரைப்பட கூட்டணி : வெளியாகிய சூப்பர் அப்டேட்!
  • PublishedMarch 18, 2023

இயக்குனர் வெற்றிமாறன், தனுஷ் கூட்டணியில் மிகப் பெரிய அளவில் பேசப்பட்ட ஒரு திரைப்படம் வடச்சென்னை.  சென்னையில் முக்கிய இடங்களில் ஒன்றான வடசென்னையில் நடக்கும் பிரச்சனையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது.

இந்தப் படத்தில் தனுஷை காட்டிலும் அமீரின் கதாபாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இப்போது அமீர் மற்றும் வெற்றிமாறன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளனர்.

இவர்களுடைய கூட்டணியில்  நிலமெல்லாம் ரத்தம் என்ற வெப் சீரிஸ் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. இதில் அமீர் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த சீரிஸ் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இந்த தொடர் ஜீ 5 ஓடிடி தளத்திற்காக உருவாகி வருகிறது. சில வருடங்களுக்கு முன்பே இந்த கூட்டணி உருவாக இருந்த நிலையில் வெற்றிமாறன் வேறு படங்களில் பிசியானதால் இந்த தொடர் தள்ளிப் போனதாக சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் அமீர் பேசி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *