”ரகுவரன் உயிரோடு இருந்திருந்தால் ………………” : வைரலாகும் ரோகிணியின் பதிவு!
![”ரகுவரன் உயிரோடு இருந்திருந்தால் ………………” : வைரலாகும் ரோகிணியின் பதிவு!](https://cinemazda.com/wp-content/uploads/2023/03/rahuvaran-770x470.webp)
நடிகர் ரகுவரனின் நினைவு தினத்தை ஒட்டி அவருடைய மனைவி ரோகிணி வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.
ஆரம்ப காலங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் வில்லனாகவும், குணசித்திர நடிகராகவும் நடித்து பிரபலமானவர் நடிகர் ரகுவரன். இவர் கடந்த 1996 ஆம் ஆண்டு நடிகையான ரோகிணியை திருமணம் செய்துகொண்டார்.
பின் கருத்துவேறுப்பாட்டால் இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். இந்த நிலையில், ரகுவரன் கடந்த 2008 மார்ச் மாதம் 19 ஆம் திகதி காலமானார்.
இந்நிலையில் அவரின் நினைவு தினத்தையொட்டி அவரது மனைவியும் நடிகையுமான ரோகினி சமூக வலைத்தளத்தின் வாயிலாக அவரை நினைவு கூர்ந்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், ரகுவரன் இருந்திருந்தால் தற்போதைய சினிமாவை நிச்சயம் விரும்பியிருப்பார். மேலும் ஒரு நடிகராகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.