ரஜினிக்காக – லதா ரஜினிகாந்த் சொன்ன அந்த வார்த்தை.
ரஜினியின் மனைவியான லதா ரஜினிகாந்த் சமூக சேவை செய்யும் நோக்கில் கடந்த ஆண்டு ‘பாரத் சேவா’ என்ற அமைப்பை தொடங்கிய நிலையில். இதன் மூலம் பல்வேறு நலத் திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். இந்த அமைப்பின் முதலாம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்ற போது இதில் மக்கள் மேடை என்ற திட்டத்தையும் அவர் தொடங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.
அதில் ஒன்றாக அவரிடம் 68 வயதில் சமூக சேவை செய்வதற்கு குடும்பம் எவ்வளவு ஆதரவாக இருக்கிறது என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ஒரு வீட்டில் கணவருடைய ஆதரவு இல்லாமல் ஒரு பெண் எதையுமே செய்ய முடியாது. அண்ணன்கள், தங்கைகள், குழந்தைகள், பேரக்குழந்தைகள்… இவர்கள் எல்லாரும் நம்முடைய எண்ணங்களை கேட்டு ஊக்கம் கொடுக்காமல் யாருமே எதையும் செய்ய முடியாது. அதற்கு முதலில் என் கணவருக்கு தலை வணங்கி நன்றி தெரிவிக்கிறேன். என்னுடைய முயற்சிகளை அவருக்கு அர்ப்பணிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.