ருத்ரனுக்கு போட்டியாகும் பிச்சைக்காரன் 2.. ஒரே நாளை குறி வைத்த விஜய் ஆண்டனிஇ ராகவா லாரன்ஸ்

ருத்ரனுக்கு போட்டியாகும் பிச்சைக்காரன் 2.. ஒரே நாளை குறி வைத்த விஜய் ஆண்டனிஇ ராகவா லாரன்ஸ்
  • PublishedFebruary 27, 2023

ருத்ரனுக்கு போட்டியாகும் பிச்சைக்காரன் 2.. ஒரே நாளை குறி வைத்த விஜய் ஆண்டனிஇ ராகவா லாரன்ஸ்
இந்த வருடத்தின் முதல் மாதத்திலேயே முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்கள் போட்டி போட்டு வெளியாகின. அந்தவகையில் அடுத்தடுத்து வெளியாகவுள்ள திரைப்படங்களும் ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டே வெளியாகி வருகின்றன.
அந்தவகையில் தற்போது வரும் ஏப்ரல் மாதம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டு படங்கள் நேருக்கு நேர் மோத இருக்கிறது.
அதாவது விஜய் ஆண்டனி இயக்கி நடித்திருக்கும் பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் முதல் நான்கு நிமிட காட்சிகள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது. அதைத் தொடர்ந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது.
அதேபோன்று ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ருத்ரன். கதிரேசன் இயக்கத்தில் பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த திரைப்படம் திகில் கலந்த திரில்லர் படமாக உருவாகி இருக்கிறது. ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்திலிருந்து வெளிவந்த ஒரு பாடல் ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது படம் ரிலீசுக்கு தயார் நிலையில் இருக்கிறது.
அந்த வகையில் இந்த இரண்டு படங்களுமே மிகப்பெரும் ஆர்வத்தை ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறது. ஏனென்றால் சில வருடங்களுக்கு முன்பு வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் விஜய் ஆண்டனிக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. அதனாலேயே அவர் இந்த இரண்டாம் பாகத்தை இயக்கி நடித்துள்ளார்.

அதேபோன்று ராகவா லாரன்ஸ் நடிக்கும் திகில் படங்களுக்கு எப்போதுமே வரவேற்பு கிடைக்கும். அதன் காரணமாகவே அவர் தற்போது அது போன்ற கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மேலும் தற்போது அவர் சந்திரமுகி 2 திரைப்படத்தில் ரஜினி நடித்த வேட்டையன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதும் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது.

அந்த வகையில் ருத்ரன் மற்றும் பிச்சைக்காரன் 2 ஆகிய இரு படங்களும் வரும் ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு தினத்தன்று நேரடியாக களத்தில் சந்திக்க இருக்கிறது. இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ள நிலையில் இந்த செய்தி சோசியல் மீடியாவையே கலக்கிக் கொண்டிருக்கிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *