லியோ திரைப்படத்தில் இணைந்த பிரபலம் : சூட்டிங் பணிகள் தீவிரம்!

லியோ திரைப்படத்தில் இணைந்த பிரபலம் : சூட்டிங் பணிகள் தீவிரம்!
  • PublishedMarch 17, 2023

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம்தான் லியோ. இந்த திரைப்படத்தை  செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் காஷ்மீரில் நடைபெற்று வருகின்றன. அத்துடன் வரும் 24 ஆம் திகதியுடன் காஷ்மீரில் படப்பிடிப்பு நிறைவு பெறவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த  நிலையில், அண்மையில் இந்த திரைபடத்தில் நடிகர் சஞ்சய் தத் இணைந்திருந்தார். இது சம்பந்தமான புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் வைரலானது. தற்போது இந்த படத்தில் இன்னும் ஒரு நகரும் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது படப்பிடிப்பில் மதுசூதனன் ராவ் இணைந்துகொண்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *