லோகேஷுக்காக காத்திருக்கும் பிரபல ஹீரோ!

லோகேஷுக்காக காத்திருக்கும் பிரபல ஹீரோ!
  • PublishedMarch 22, 2023

முன்னணி இயக்குனர்களில் ஒருவரான லோகேஷின்  இயக்கத்தில் ஒருமுறையாவது நடிக்க வேண்டும் என நடிகர்கள் காத்துகொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் பாலிவுட்டில் பல ஹீரோக்கள் லோகேஷுக்கு வலை வீசி வருகின்றனர். இதில் குறிப்பாக சல்மான் கான் லோகேஷ் தனது படத்தை இயக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளாராம். அதுமட்டுமின்றி அந்த படத்தை தானே தயாரிக்கவும் முன்வந்துள்ளார்.

லோகேஷுக்கு இந்த படத்திற்காக 50 கோடி வரை சம்பளம் கொடுப்பதாக கூறியுள்ளாராம். இது ஒரு புறம் இருக்க தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் லோகேஷ் இடம் கதை கேட்டுள்ளார். தன்னுடைய கடைசி படத்தை லோகேஷ் தான் இயக்க வேண்டும் என்று ரஜினி விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி சூப்பர் ஸ்டாரின் கடைசி படம் லோகேஷின் கைவசம் தான். மேலும் ரஜினியை வைத்து லோகேஷ் இயக்கம் படத்திற்கு 35 கோடி சம்பளம் தருவதாக பேசப்பட்டுள்ளது. இவர்களையெல்லாம் தாண்டி மூன்றாவதாக மரண அடி ஹீரோ ஒருவரும் லோகேஷுக்கு வலை வீசி இருக்கிறார்.

அதாவது கே ஜி எஃப் படம் ஹீரோ யாஷ் லோகேஷை ஒரு கதை ரெடி பண்ண சொல்லி உள்ளாராம். ஏற்கனவே கே ஜி எஃப் படத்தின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ள யாஷ் வேற லெவலில் தன்னை ரசிகர்கள் கொண்டாட வேண்டும் என்பதற்காக திட்டம் தீட்டியுள்ளதால் லோகேஷை தெரிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *