வெளியாகியுள்ள அனுஷ்காவின் புதிய படத்தின் டைட்டில் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்
நடிகை அனுஷ்கா நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்து வரும் புதிய படத்தின் டைட்டில் தற்போது வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.
பாகுபலி 2ம் பாகத்தில் நடிக்கவே நடிகை அனுஷ்காவின் உடம்பை சிஜியின் உதவியுடன் குறைத்து எடுத்ததாக தகவல்கள் வெளியாகின.அதன் பிறகு கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக எந்தவொரு படத்தையும் வெளியிடாமல் இருந்து வரும் அனுஷ்கா தற்போது தனது புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பை அதிரடியாக வெளியிட்டுள்ளார்.
மம்தா மோகன் தாஸ் நடிக்க வேண்டிய அருந்ததி படத்தில் கடைசி நேரத்தில் அவர் நடிக்க தயங்கிய நிலையில், அனுஷ்காவிற்கு அந்த ஜாக்பாட் அடித்தது. அருந்ததி படத்தில் நடித்த அனுஷ்காவிற்கு தமிழ், தெலுங்கு மொழிகளில் ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. நாகார்ஜுனா படத்தில் நடித்து அறிமுகமான அனுஷ்கா ரஜினிகாந்த், விஜய், அஜித் என கோலிவுட்டின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார்.
பாகுபலி முதல் பாகத்தில் அம்மா கதாபாத்திரத்தில் கிழிந்த புடவையுடன் சிறை கைதியை போல நடித்த அனுஷ்கா இரண்டாம் பாகத்தில் அழகு தேவசேனாவாக நடித்து அசத்தியிருப்பார். அதற்கு முன்னதாகவே அனுஷ்காவின் உடல் எடை அதிகரித்து விட்ட நிலையில், இயக்குநர் ராஜமெளலி சிஜி உதவியுடன் அனுஷ்காவின் உடல் எடையை குறைத்ததாக தகவல்கள் வெளியாகின.
நம்பர் ஒன் நடிகையாக தென்னிந்தியாவையே கலக்கி வந்த அனுஷ்காவின் இந்த நிலைக்கு காரணமே ஆர்யாவுடன் அவர் இணைந்து நடித்த இஞ்சி இடுப்பழகி படம் தான். அந்த படத்தில் நடிப்பதற்காக தனது உடல் எடையை ஏகத்துக்கும் தீனிப் போட்டு ஏற்றிய அனுஷ்காவால் அதில் இருந்து எவ்வளவு உடற்பயிற்சி செய்தாலும், எந்த சிகிச்சை எடுத்தாலும் பழைய வானம் பட ஷேப்புக்கு மாறவே முடியவில்லை.
உடல் எடை எப்படி இருந்தால் என்ன தனது நடிப்புத் திறமை ஒன்றே போதும் என நினைத்து மாதவன் உடன் இணைந்து அனுஷ்கா நடித்த சைலன்ஸ் படம் சத்தமே இல்லாமல் வாஷ் அவுட் ஆனது. அதன் பிறகு அனுஷ்கா நடிப்புக்கு பெரிய பிரேக் விட்டு தனது உடல் எடையை குறைக்க மீண்டும் கேரளா சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டு வந்தாலும், இன்னமும் அவரது தோற்றம் பழைய நிலைமைக்கு மாறவில்லை என்கின்றனர்.
நடிகை அனுஷ்கா தனது 48வது படத்தில் சமையல் கலைஞராக நடித்து வருகிறார் என ஏற்கனவே போஸ்டர் வெளியான நிலையில், தற்போது அந்த படத்தின் டைட்டிலை வெளியிட்டுள்ளனர். “மிஸ் ஷெட்டி.. மிஸ்டர் பொலிஷெட்டி” என்கிற வித்தியாசமான டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ், தெலுங்கு மற்றும் ஆங்கில போஸ்டர்களை நடிகை அனுஷ்கா வெளியிட்டுள்ளார்.
பிரின்ஸ் படத்தை இயக்கிய அனுதீப் கேவி இயக்கத்தில் வெளியான ஜதி ரத்னலு படத்தில் நடித்த நவீன் பொலிஷெட்டி தான் இந்த படத்தில் அனுஷ்காவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அனுஷ்கா ஷெட்டியில் இருந்து ஷெட்டியையும் நவீன் பொலிஷெட்டியில் இருந்து பொலிஷெட்டியையும் எடுத்தே டைட்டிலாக இயக்குநர் மகேஷ் பாபு வைத்துள்ளார். இந்த படத்தில் ஹீரோ ஸ்டாண்ட் அப் காமெடியனாகவும் ஹீரோயின் அனுஷ்கா மாஸ்டர் செஃப் ஆகவும் நடித்துள்ளனர்.