‘ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு’ கவனம் பெறும் பிக்பாஸ் புதிய புரொமோ

‘ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு’ கவனம் பெறும் பிக்பாஸ் புதிய புரொமோ
  • PublishedSeptember 11, 2024

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ள நிலையில் அது தொடர்பாக தற்போது வெளியாகியிருக்கும் புரொமோ ஒன்று கவனம் பெற்று வருகிறது.

இனி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது விஜய் சேதுபதிதான் என்ற அதிகாரபூர்வ ப்ரோமோவும் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தனர்.

இந்நிலையில் ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற புதிய புரொமோவை பிக்பாஸ் டீம் இன்று வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பட்ட பிக்பாஸ் ரசிகர்கள் விஜய் சேதுபதிக்கு ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

சுவாரசியமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

https://www.youtube.com/watch?v=o_476XcuNu4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *