இதுதான் என் கடைசி படம் : சமூகவலைத்தளங்களில் வைரலாகும் பாராதிராஜாவின் கருத்து!
இயக்குனர் பாரதிராஜா, கிராமிய கதைகளின் மூலம் வெற்றிக்கண்ட இயக்குனரான தங்கர் பச்சானின் படத்தில் கமிட்டாகியுள்ளார்.
1977 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான பாரதிராஜர் கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் தரமான கதைகளை தந்ததோடு சிறந்த நடிகர் நடிகைகளையும் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
அவ்வப்போது ஒரு சில படங்களில் கௌரவ தோற்றத்தில் வந்த பாரதிராஜா முதன்முறையாக 2004 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ஆயுத எழுத்து திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் தன் பயணத்தை தொடங்கினார்.
இந்நிலையில், தற்போது பாரதிராஜாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. உடல்நிலை கொஞ்சம் சரியான பிறகு மீண்டும் பாரதிராஜா நடிக்க ஆரம்பித்தார்.
சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்த திருச்சிற்றம்பலம், வாத்தி போன்ற படங்களில் நடித்திருந்தார்.
தற்போது அழகி, பள்ளிக்கூடம் போன்ற கிராமிய கதைகளின் மூலம் வெற்றி கண்ட இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கும் கருமேகங்கள் கலைவதில்லை என்ற ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இந்த படத்தில் பாரதிராஜா, ஜிவிஎம், வைரமுத்து, யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர். லோ பட்ஜெட்டில் உருவாகிக்கொண்டிருக்கும் இந்த படத்தின் தொடக்க விழாவானது சமீபத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய பாரதிராஜா இதுதான் தன்னுடைய கடைசி படம் என்று அறிவித்து இருக்கிறார்.
உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால்தான் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.