இரண்டு முறை தற்கொலைக்கு முயன்ற பிரபல இசையமைப்பாளர்.

இரண்டு முறை தற்கொலைக்கு முயன்ற பிரபல இசையமைப்பாளர்.
  • PublishedFebruary 24, 2026

பிரபல தெலுங்கு திரைப் பிரபலமான  விஸ்வக் சென் இயக்கத்தில் அவரே முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் கல்ட்

கேஜிஎப் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இப்படம் தெலுங்கு, இந்தி உட்பட வெளிநாட்டு மொழிகளிலும் விரைவில் வெளியாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் படத்தின் டீசர் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடந்தது.

இதில் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் பேசியபொழுது ,சிறுவயதில் இரண்டுமுறை தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் பேசியதாவது, “என்னுடைய 18வது வயதில், நான் இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றேன். ஆனால் இரண்டு முறையும் காப்பாற்றப்பட்டேன். இரண்டாவது முறையாக என்னைக் காப்பாற்றியவர் எனது இசையைக் கேட்டு, எனக்கு ஒரு கீபோர்டு வாங்கிகொடுத்து  ரூ35,000 கொடுத்தார். அன்று நான் என் பெயரை ரவி என்று மாற்றினேன். அது என் உயிரைக் காப்பாற்றியவரின் பெயர்” என்று உணர்வு பூர்வமாக பேசி உள்ளார் .

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *