ஏகே 62 அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது?
துணிவு திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு அஜித்தின் அடுத்த திரைப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு இரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
ஆனாலும் ஏகே 62 திரைப்படத்தின் சூட்டிங் தாமதமாகி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் இயக்குனரை முடிவு செய்வதில் இருந்த குளறுபடி தான்.
விக்னேஷ் சிவன் இந்த படத்திலிருந்து விலகியதை தொடர்ந்து தற்போது மகிழ்திருமேனி தான் அஜித்தை இயக்க இருக்கிறார். இது குறித்த பல செய்திகள் வெளி வந்தாலும் இன்னும் தயாரிப்பு நிர்வாகம் படம் சம்பந்தமாக எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் வெளியிடவில்லை.
அதனால் ரசிகர்களும் என்ன நடக்கிறது என தெரியாமல் குழப்பத்தில் இருக்கின்றனர். அவருக்கு அடுத்ததாக வந்த மகிழ்த்திருமேனி தற்போது அஜித் மற்றும் தயாரிப்பு நிறுவனத்திடம் மாட்டிக் கொண்டு ரெண்டு பக்கமும் அடி வாங்கும் மத்தளம் போல் இருக்கிறாராம்.
இது எல்லாவற்றிற்கும் மூலகாரணம் என்று பார்த்தால் துணிவு திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு தான் அதை அப்படியே தக்க வைத்துக் கொள்ள நினைக்கும் அஜித் தற்போது இயக்குனரை படாத பாடு படுத்தி வருகிறார் என தகவல் கசிந்துள்ளது.