குவிந்த வாழ்த்து – இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சி
நேற்றைய தினம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது 37-வது பிறந்த நாளை கொண்டாடினார்.
அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைதளத்தில் தெரிவித்தனர்.
அவருடைய தீவிரமான ரசிகர்கள் பலரும் போஸ்டர்கள், வீடியோக்கள் என வெளியீட்டு வாழ்த்துக்களை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், லோகேஷ் கனகராஜ் தனது ட்வீட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை செய்துள்ளார். அதில் “நன்றி போதுமானதாக இருக்காது, இன்னும் அனைத்து மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் மற்றும் அனைத்து மாஷ்அப்கள், பிறந்த நாள் வீடியோ , ரசிகர் பக்கங்களுக்கு ஒரு பில்லியன் நன்றி. இது என்னை அதிக பொறுப்பாக்கி, மக்களை மகிழ்விப்பதில் என் இதயத்தையும் ஆன்மாவையும் செலுத்துவேன். உங்கள் அனைவருக்கும் நன்றி” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து நடிகர் விஜய் மற்றும் சஞ்சய் தத், ஆகியோரும் லோகேஷ் கனகராஜுக்கு வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் வெளியீட்டு லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
மேலும் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்துள்ள லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய்யை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் பகுதியில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.