தளபதியின் லியோ படம் குறித்து ஆக்ஷன் கிங் அர்ஜுன் வெளியிட்ட மாஸ் தகவல்!
லோகேஷ், விஜய் கூட்டணியில் தயாராகி வரும் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போது உச்சத்தில் உள்ளது. ஏனென்றால் இந்த படத்தில் திரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், அர்ஜுன் போன்ற முக்கிய பிரபலங்கள் நடிக்கிறார்கள்.
இந்த படத்தை குறித்து அப்டேட் தினமும் இணையத்தில் வெளியாகி வருகிறது.
இதன்படி ஆக்சன் கிங் அர்ஜுன் இந்த படத்தை பற்றி சில விஷயங்களை பகிர்ந்து உள்ளார். அதாவது லோகேஷின் முந்தைய படங்களான விக்ரம் மற்றும் கைதி படத்தை நான் பார்த்து வியந்துள்ளேன்.
இப்போது எல்லோருமே கமர்ஷியல் படங்கள் தான் எடுத்து வந்தாலும் லோக்கேஷின் ஸ்டைல் மொத்தமாக வேறு மாதிரி உள்ளது. மேலும் லியோ படத்தின் மூலம் முதல்முறையாக விஜய் உடன் சேர்ந்து பணியாற்றுகிறேன். இதற்கு முன்பு இதுபோன்ற வாய்ப்பு எங்களுக்கு கிடைத்ததில்லை என அர்ஜுன் கூறியுள்ளார்.
மேலும் ஏற்கனவே மங்காத்தா படத்தில் பிரித்வி என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக அர்ஜுன் மிரட்டி இருப்பார். இதே போன்ற கதாபாத்திரத்தை லியோ படத்திலும் எதிர்பார்க்கலாமா என்று செய்தியாளர் அர்ஜுனிடம் கேட்டிருந்தார்.
அதற்கு மக்கள் எனக்கு கொடுத்த டைட்டிலை ஈடுகட்டும் விதமாக லோகேஷ் இந்த படத்தை எடுக்கிறார். கண்டிப்பாக இதுவரை என்னை யாரும் இந்த கதாபாத்திரத்தில் பார்த்திருக்க மாட்டார்கள் என்று அர்ஜுன் கூறியுள்ளார்.
ஏற்கனவே லியோ படம் முழுக்க முழுக்க ஆக்சன் படமாக எடுக்கப்பட உள்ளதாக செய்தி வெளியான நிலையில் விஜய்க்கு வில்லனாக தற்போது அர்ஜுன் நடிக்கிறார் என்பது இதன் மூலம் உறுதியாகி உள்ளது.