நடிகர் பிரபு தேவா மிஸ் செய்த சூப்பர் ஹிட் திரைப்படம்!
இந்திய சினிமாவில் மைக்கேல் ஜாக்சனாக பார்க்கப்படுபவர் தான் நடிகர் பிரபுதேவா. நடனம் மாத்திரம் இல்லாமல் சிறந்த நடிகர், மற்றும் சிறந்த இயக்குனராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.
அண்மைக்காலமாக திரைப்படங்களை இயக்குவதை காட்டிலும் நடிப்பதிலேயே தனது கவனத்தை செலுத்தி வருகிறார். இருப்பினும் அவர் நடிப்பில் வெளியான படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பாகீரா திரைப்படம் கூட அந்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை.
இந்நிலையில் தற்போது பிரபு தேவா தவறவிட்டு, மிகப் பெரிய அளவில் வெற்றிப் பெற்ற படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் செல்வராகவன் தனுஷை வைத்து இயக்கிய காதல் கொண்டேன் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்னதாக பிரபு தேவாவிடம் கேட்டிருந்தாராம்.
இருந்தாரும், பிரபுதேவா செல்வராகவன் மீது அவ்வளவு பெரிய நம்பிக்கை கொண்டிருக்காததால் அப்போது அந்த படத்தை நிராகரித்திருந்தாராம்.
பிரபுதேவா மட்டும் இந்த படத்திற்கு ஓகே சொல்லி இருந்தால் கண்டிப்பாக அவருடைய சினிமா வாழ்க்கை வேற லெவலில் மாறி இருக்கும். இந்த படத்தில் நடித்ததின் மூலம் தான் தனு{க்கு சினிமாவில் ஒரு அடையாளம் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.