யாருப்பா இது.. நம்ம காஜலா?? ஐயோ என புலம்பும் ரசிகர்கள்… வைரலாகும் புகைப்படம்

யாருப்பா இது.. நம்ம காஜலா?? ஐயோ என புலம்பும் ரசிகர்கள்… வைரலாகும் புகைப்படம்
  • PublishedMay 9, 2024

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் காஜல் அகர்வால். கோலிவுட்டில் விஜய், அஜித், சூர்யா போன்ற டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த இவர், திருமணத்துக்கு பின்னர் மார்க்கெட் இழந்துவிட்டார்.

இவருக்கு கடந்த 2020-ம் ஆண்டு கவுதம் கிச்சிலு என்பவருடன் திருமணம் ஆனது. இந்த ஜோடிக்கு நீல் கிச்சிலு என்கிற ஆண் குழந்தையும் பிறந்தது. தற்போது நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது.

தமிழில் இந்தியன் 2 படத்தை மலைபோல் நம்பி இருக்கிறார் காஜல் அகர்வால். அப்படத்தின் ரிசல்டை பொறுத்து தான் அவருக்கு கோலிவுட்டில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கும்.

தற்போதைக்கு அவர் கைவசம் தெலுங்கில் பாலகிருஷ்ணா படம் மட்டுமே உள்ளது. இந்த நிலையில் நடிகை காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

அந்த புகைப்படத்தில் முகம் வீங்கி ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி காட்சியளிக்கிறார் காஜல் அகர்வால்.

அதைப்பார்த்த ரசிகர்கள் இது காஜல் அகர்வால் தானா என கேட்டு வருகின்றனர். ஒரு சிலரோ அவர் பிளாஷ்டிக் சர்ஜரி செய்துகொண்டாரா என்றும் முகத்துக்காக ஏதேனும் சிகிச்சை எடுத்துக்கொண்டாரா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *