விஜய் தேவரகொண்டாவின் அதிரடி அறிவிப்பு.

விஜய் தேவரகொண்டாவின் அதிரடி அறிவிப்பு.
  • PublishedMarch 3, 2026

திருமணத்துக்கு பிறகு விஜய் தேவரகொண்டா தனது சொந்த ஊரான தெலுங்கானாவில் உள்ள தும்மனபேட்டாவிற்கு மனைவி ராஷ்மிகா மற்றும் குடும்பத்துடன் சென்றுள்ள நிலையில்.அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள தனது வீட்டின் கிரஹப்பிரவேசம் மற்றும் சத்யநாராயண விரத பூஜையையும் நடத்தினார்.

இதில் பேசிய அவர், ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அதாவது அப்பகுதியில் இருக்கும் 44 அரசுப் பள்ளிகளில் பத்தாம் மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித் தொகை தரவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இதனை தனது அறக்கட்டளை மூலம் செய்வதாக தெரிவித்த அவர், பொருளாதார நெருக்கடி இல்லாமல் மாணவர்கள் கல்வியை பயில வேண்டும் என இந்த உதவியை செய்வதாகவும் கூறினார்.

மேலும் இனிமேல் தனது கிராமத்திற்கு தவறாமல் அடிக்கடி வருவதாக தெரிவித்துள்ளார். இதனை கேட்ட அந்த ஊர் மக்கள் விஜய் தேவரகொண்டாவை வெகுவாக பாராட்டினர். திருமணம் முடிந்த பிறகு உடனடியாக அறிவிக்கப்பட்ட இந்த உதவித்தொகையால் விஜய் தேவரகொண்டாவை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *