சிலம்பரசன் படத்தில் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர்.

சிலம்பரசன் படத்தில் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர்.
  • PublishedMarch 2, 2026

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, சிலம்பரசன் சந்தானம் வெற்றிக் கூட்டணி மீண்டும் இணையப்போவதாக வெளியாகி உள்ள தகவல், கோலிவுட் ரசிகர்களை தற்போது உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் ‘STR 49’ படத்தில் இணையப் போவதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், பல்வேறு காரணங்களால் அந்தத் திட்டம் தள்ளிப்போனது. இப்போது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாக உள்ள ‘STR 51’ திரைப்படத்தில் சந்தானம் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. இது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டால், சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து தங்களது சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவார்கள் என்பது உறுதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *