படத்தில் நடிக்க விருப்பமா? அனிருத்தின் பதில்?
பிரபல இசை அமைப்பாளர். தற்போது ஜெயிலர் 2, ரஜினி – கமல் இணையும் படம், ரஜினியின் 173வது படம், விஜய்யின் ‘ஜனநாயகன்’ தெலுங்கில் நானியின் ‘தி பாரடைஸ்’, லோகேஷ் கனகராஜ் – அல்லு அர்ஜுன் படம் என ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இவ்வாறாக இசையமைப்பதில் அவர் பிசியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் அவரிடம், நீங்கள் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா? எனக் கேள்வி எழுப்பப்பட்ட போது இதற்குப் பதிலளித்த அவர், “இசைதான் எனக்கு மிகவும் பிடித்தது. அதில் நான் என்னுடைய கவனத்தை செலுத்துகிறேன். 15 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து வருகிறேன். இதுவரை பெற்ற வெற்றிகள் போதாது. இசையில், இன்னும் பல சாதனைகளைப் படைக்க விரும்புகிறேன்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.