மனைவியுடன் விஜய் சமரசமா ?
அண்மைய நாட்களில் பேசு பொருளாக மாறியுள்ள விஜய் மற்றும் அவரது சங்கீதா விவாகரத்து வழக்கில் அதிரடி திருப்பமாக மனைவி சங்கீதாவுடன் விஜய் சமசரம் பேசியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி மனைவி சங்கீதா, மகன் சஞ்சய், மகள் திவ்யா ஆகியோருக்கு தலா 250 கோடி ரூபாய் வழங்க விஜய் ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இதனால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள விவாகரத்து மனுவை திரும்ப பெற வேண்டும் என சங்கீதாவிடம் விஜய் கூறியதாகவும் தகவல்கள் கசிகின்றன.
மேலும் விஜய்யின் சமசரத்தை ஏற்று சங்கீதாவும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை திரும்ப பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதேவேளை இது தொடர்பாக விஜய் தரப்பில் இருந்தோ, சங்கீதாவிடம் இருந்தோ எந்தவித அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.