சேயோன் படத்தில் கமலா?
சிவகார்த்திகேயனை வைத்து கமல் தயாரிக்கும் ‘சேயோன்’ படத்தை ‘தாய்கிழவி’யை இயக்கிய சிவக்குமார் முருகேசன் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதில் கமல் கௌரவ வேடத்தில் நடிப்பாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
காரணம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் தாய்கிழவி திரைப்படத்தில் கமலின் பாடல்களை சிறப்பாக பயன்படுத்தி இருந்தார் இயக்குநர் சிவகுமார் முருகேசன். மேலும் அவர் தீவிர கமல் ரசிகர் என்றும் சொல்லப்படுகிறது.
அதனால் சேயோன் படத்தில் கமலை நடிக்க வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் சேயோன் பட இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், கமலை பாட வைக்கவும் விரும்புகிறாராம். குறித்த தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் சேயோன் பட மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது .